திருவாரூர் இடைத்தேர்தல்: அதிமுக முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (21:26 IST)
இன்று மாலை திருவாரூரில் இடைத்தேர்தல் வரும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்தே அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகிவிட்டது. குறிப்பாக ஆளும் அதிமுகவும், கருணாநிதி ஜெயித்த தொகுதியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற தீவிரத்தில் உள்ள திமுகவும் தேர்தல் பணியை இன்றே தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் திருவாரூரில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவோருக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தலைமைக்கழகம் அறிவித்த்துள்ளது.

மேலும் ஜனவரி 4ஆம் தேதியன்று விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் தலைமை கழகத்தில் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்