பூந்தமல்லியை தூக்கி கொடுத்த அதிமுக! – அதிமுகவினர் சாலையில் ஆர்ப்பாட்டம்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (10:44 IST)
சென்னை பூந்தமல்லி தொகுதி கூட்டணி கட்சிக்கு வழங்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாமக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை பூந்தமல்லி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பூந்தமல்லி தொகுதியை சேர்ந்த அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நசரத்பேட்டை சாலையில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. நேற்று கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்டதை கண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்