ஐவர் அணிக்கு "ஆப்பு" வைத்த ஜெயலலிதா

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (13:12 IST)
அதிமுக ஆட்சியிலும், கட்சியிலும் ஜொலித்த ஐவர் அணி தற்போது காணாமல் போய் உள்ளது.
 

 
கடந்த முறை நடைபெற்ற அதிமுக ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆடுத்து, ஆட்சி மற்றும் கட்சியில் அதிகாரத்தை பெற்றிருந்தனர் ஐவர் அணி. 
 
இந்த ஐவர் அணியில், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, வைத்தியலிங்கம், பழனியப்பன் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். 
 
இவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வரவே, இவர்கள் மீதே விசாரணை வைத்து திடுக்கிடவைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
 
இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். 
 
இதனையடுத்து, வழக்கம் போல் மீண்டும் ஐவர் அணி செயல்படதுவங்கும் என பலரும் கணித்தனர். ஆனால், சட்ட மன்றத் தேர்தலில், ஐவர் அணியில், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகிய இரு விக்கெட்டுகள் அவுட்டானது. இதனால், ஐவர் அணி மூவர் அணியாக சுருங்கிப்போனது. மேலும், ஐவர் அணி என்று ஒன்று இல்லை என்று வெட்டவெளிச்சமாக்கியுள்ளார் ஜெயலலிதா. 
 
மேலும், ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி தனது நேரடிப்பார்வையை செலுத்த தொடங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஆக, முதல்வரின் அதிரடி இனி தொடரும்.  
அடுத்த கட்டுரையில்