இதற்காக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் அதற்கானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இப்போது பணிகள் முழுவதும் முடிந்து அறிக்கை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் வழங்கப்பட்டுள்ளது.