’கிழியாத சட்டை கிழிச்சுட்டு போஸ்’ ...ஸ்டாலினைச் சீண்டிய பிரேமலதா

வெள்ளி, 8 மார்ச் 2019 (15:47 IST)
துரைமுருகன் மற்றும் தேமுதிக எல் கே சுதீஷ் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகளால்  தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடித்து வருகிறது. நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று தேமுதிக சார்பில் எங்களிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார். ஆனால் அதே சமயத்தில் தேமுதிக அதிமுகவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்ததாகக விமர்சனம் எழுந்தது.
ஆனால் துரைமுருகனின் குற்றச்சாட்டை தேமுதிக தரப்பில் மறுத்துள்ளன. துரை முருகன் தான் திமுக தலைமை மீது அதிருப்தி கொண்டு தன்னிடம் புலம்பினார் என எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார். இதனால் திமுக மற்றும் தேமுதிக இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.  அதையடுத்து மாறி மாறி துரைமுருகனும் சுதீஷும் குற்றச்சாட்டுகளை வைக்க தேமுதிக மற்றும் திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.
 
இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய தேமுதிகவின்  பொருளாளரான பிரேமலாத விஜயகாந்த் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
 
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொன்னவர் திடீரென்று செய்தியாளர்களை நோக்கி நீ வா போ என ஒருமையில் பேசினார்
அப்போது துரைமுருகன் பற்றி கூறிய அவர் அவர் நேற்று உளறினார் என்று கூறினார். அப்போது பலதரப்பட்ட கேள்விகளை செய்தியாளர்கள் அவரிடம் வைத்தனர். 
 
 
அதற்குப் பிரேமலதா கூறியதவாது :

 
திமுக என்றாலே அது திருட்டுக் கட்சிதான். கருணாநிதியிடம் கணக்குக் கேட்டதால் தான் எம்ஜிஆர் திமுக கட்சியிலிருந்து துரத்தப்பட்டார்.
 
அதனால் திமுக என்றாலே அது தில்லு முல்லு கட்சிதான். என்று பேசினார்.  இது திமுக தொண்டர்களிடைய்டே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தெரிந்துதானே திமுகவுடன் கூட்டணிக்காக பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப..
 
இதை விட ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கருத்து நீதியாக மோதிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டார்கள் என்று சமாளித்தார்.
 
இதனையடுத்து ஆனால் கிழியாத சட்டையை கிழிந்ததாகக் காட்டி போட்டோ எடுப்பது தேமுதிக இல்லை என்று ஸ்டாலினை வம்பிழுப்பது போல் பிரேமலதா பேசினார். அதேபோல கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது கருணாநிதியை பார்க்க ஸ்டானின் அனுமதி தரவில்லை என்று குற்றம்சாட்டினார்.
(எதிர்கட்சித் தலைவரான  ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டசபையில் நடந்த சட்டசபை நிகழ்வின் போது அதிமுகவிற்கும் திமுகவிற்கும் காரசாரமாக விவாதம் நடைபெறும் போது சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டு இதில்  ஸ்டாலின் சட்டை கிழிந்தபடி வெளியே வந்தார். இது ஊடகங்களில் காட்டுத் தீ போல் பரவியது குறிப்பிடத்தக்கது.)
ஸ்டாலின் இதற்கு என்ன பதிலடி தரப்போகிறார் என்று திமுகவினர் எதிர்பார்த்துள்ளதாக தலவல் வெளியாகிறது.

இந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது செய்தியாளர்களை யாரும் கூறாத வகையில் ஒருமையில் பேசினார் பிரேம்லதா விஜயகாந்த். இதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்