துரைமுருகன் மற்றும் தேமுதிக எல் கே சுதீஷ் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகளால் தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடித்து வருகிறது. நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் தேமுதிக சார்பில் எங்களிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார். ஆனால் அதே சமயத்தில் தேமுதிக அதிமுகவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்ததாகக விமர்சனம் எழுந்தது.
ஆனால் துரைமுருகனின் குற்றச்சாட்டை தேமுதிக தரப்பில் மறுத்துள்ளனர். துரை முருகன் தான் திமுக தலைமை மீது அதிருப்தி கொண்டு தன்னிடம் புலம்பினார் என எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார். இதனால் திமுக மற்றும் தேமுதிக இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. அதையடுத்து மாறி மாறி துரைமுருகனும் சுதீஷும் குற்றச்சாட்டுகளை வைக்க தேமுதிக மற்றும் திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.