10 சீட் கேட்ட பாஜக – 5 சீட்டிற்கு சம்மதித்தது எப்படி ? – எடப்பாடியின் நெத்தியடி!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (09:18 IST)
தமிழகத்தில் 10 சீட்களுக்கு மேல் போட்டியிட நினைத்திருந்த பாஜகவுக்கு 5 சீட்டுகள் மட்டுமே கொடுத்து கூட்டணி டீலை முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாகவே இந்தக் கூட்டணி அறிவிக்கப்பட்டாலும் இன்னும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட் என்ற விவரம் இன்று வரையில் வெளியாகவில்லை.

ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக-பாமக-தேமுதிக ஆகியக் கட்சிகள் இணைவது நேற்று வரையில் வெறும் யூகங்களாகவே இருந்தது. ஆனால் இன்று காலை பாமக வோடு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாமக. அந்தக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் மாநிலங்களவைத் தேர்தலில் 1 தொகுதியும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதையடுத்து சில மணி நேரங்களில் பாஜக வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து 5 தொகுதிகளைக் கொடுத்து டீலை முடித்தது.

மாநிலக் கட்சியான பாமகவுக்கே 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில் தேசியக் கட்சியான பாஜகவுக்கு அதைவிட அதிகமாகவோ அல்லது அதே அளவோ தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 5 சீட்களை முடித்து அசத்தியுள்ளது. ஆனால் பாஜகவோ கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்போதே 10 சீட்கள் கண்டிப்பாக வேண்டும் என்றுதான் ஆரம்பித்திருக்கிறது. பேச்சுவார்த்தையின் போது இரண்டு சீட்களைக் குறைத்துக்கொண்டு 8 சீட்களே இறுதி என்றும் கூறியிருக்கிறது.
ஆனால் பாஜகவை வழிக்குக் கொண்டுவரும் விதமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் அதில் அடைந்த வெற்றி தோல்விகள் ஆகியப் புள்ளி விவரங்கள் அடங்கியப் பட்டியலை பாஜக தலைவர்கள் முன் சமர்ப்பித்தது. அந்த புள்ளிவிவரங்களிலேயே பாஜக வின் பலவீனம் பாதி தெரிய, அடுத்ததாக தனது இன்னொரு ஆயுதத்தைத் தொடுத்துள்ளார். அது என்னவென்றால் ‘ தமிழகத்தில் அதிமுகவுக்கு 37 எம்.பி.கள் இருக்கின்றனர். ஆனால் பாஜகவுக்கோ 1 எம்.பி. மட்டுமே இருக்கிறார். அதனால் 5 தொகுதிகள் என்பதே அதிகம் எனக் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டதும் உடனடியாக பாஜக ஒத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இன்னும் கூட்டணியில் இணைய இருக்கும் தேமுதிக வுக்கு எத்தனைத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்