அன்னவாசல் பேரூராட்சி தலைவர் யார்? – அதிமுக, திமுக இடையே கைகலப்பு!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (11:47 IST)
அன்னவாசல் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்தில் அதிமுக, திமுக இடையே மோதல் நடந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பல பேரூராட்சி, நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இன்று மாநகராட்சிக்கான மேயர்கள், பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர்கள் பதவியேற்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக 8 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் அதிமுக, திமுகவினர் இடையே அங்கே மோதல் நிகழ்ந்துள்ளது.

இருதரப்பினரையும் போலீஸார் அடித்து விரட்டியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த களேபரங்களுக்கு நடுவே அதிமுகவை சேர்ந்த சாலை பொன்னம்மாள் போட்டியின்றி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்