இன்று முதல் உயர்கிறது ஆவின் பொருட்களின் விலை!

வெள்ளி, 4 மார்ச் 2022 (08:26 IST)
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில்  பொருட்களை விலையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. 
 
ஆவின் பொருட்களான நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 
 
அரை லிட்டர் தயிர் ரூ.27 லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
1 லிட்டர் ஆவின் நெய் 515 ரூபாயில் இருந்து 535 ரூபாயாக உயர்வு.  
 
குல்பி 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் விலை உயர்வு.  
 
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்