உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வில் அதானி குழுமம் தமிழ் நாட்டில் ரூ.42000 கோடி முதலீடு செய்துள்ளளது.
சென்னை- நந்தனம்பாக்கத்தில் உள்ள வர்த்தகக் மையத்தில் நேற்று முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடியில் முதலீடு செய்து, அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த மூலம் மின்துறையில் ரூ.1.75 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வில் அதானி குழுமம் தமிழ் நாட்டில் ரூ.42000 கோடி முதலீடு செய்துள்ளளது.
இதன் மூலம் தமிழ் நாட்டில் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதனானி எனர்ஜி 24,000 கோடி முதலீடு செய்துள்ள நிலையில், இதன் மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; அம்புஜா சிமெண்ட் ரூ 3500கோடி முதலீடு செய்துள்ள நிலையில், 5000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், அதானி கனெக்ஸ்ட் ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ளதால் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், அதானி பசுமை எரிசக்தி துறையில் ரூ1568 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.