சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: ஒரே நாளில் எகிறிய அதானி குழும பங்குகள்!

புதன், 3 ஜனவரி 2024 (14:25 IST)
அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் மிக மோசமாக சரிந்தது. இதனை அடுத்து ஹிண்டன்பர்க்  நிறுவனத்தின் மீது அதானி குழுமம் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. 
 
இந்த நிலையில் அதானி குழுமங்கள் மீது கூறிய குற்றச்சாட்டு சட்டவிதி மீறலாக இருந்தால் அந்நிறுவனம் எது நடவடிக்கை எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து செபியே விசாரணை செய்யலாம் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
இந்த தீர்ப்பை அதானி வரவேற்றுள்ள நிலையில் நீதி வென்று உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த தீர்ப்பை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று உச்சத்திற்கு சென்று உள்ளது. ஒட்டுமொத்தமாக அதானி குழும பங்குகள் 18 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாகவும் குறிப்பாக அதானி போர்ட்ஸ் 6 முதல் 9 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன .
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்