நடிகை குஷ்பூ ட்விட்டர் கணக்கு ஹேக்கிங்..??! – அனைத்து பதிவுகளும் நீக்கம்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (12:06 IST)
நடிகையும், பாஜக பிரபலமுமான குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டு பதிவுகள் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பிரபல நடிகையான குஷ்பூ முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவரது ட்விட்டர் கணக்கில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை முடக்கி பெயரை மாற்றியதுடன், அதில் இருந்த அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளனர். இதை செய்தது ஒரு நபரா அல்லது குழுவா என்ற விவரங்கள் தெரியவில்லை, இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்