”புலி” பட வருமானத்தை மறைத்தாரா விஜய்?? – அபராதத்திற்கு இடைக்கால தடை!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (13:09 IST)
புலி திரைப்படத்தில் பெற்ற வருமானத்தை மறைத்ததாக நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நடிகர் விஜய் நடித்து சிம்பு தேவன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான படம் புலி. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் இந்த படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற சம்பளத்தில் இருந்து ரூ.15 கோடியை கணக்கில் காட்டாமல் மறைத்ததாக வருமான வரித்துறை நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதமாக விதித்தது. இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி விவகாரத்தில் விஜய் சிக்கிய நிலையில் மீண்டும் வருமானவரி சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்