இந்தி சினிமாவில் தங்கம், தாரே ஜாமின் தார், தூம்-3 உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில், அத்விடத் சாண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால்சிங் சத்தா. இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.
இப்படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் அமீர்கான் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், நடிகர் விஜய் ஒரு அற்புதமான மனிதர். அவரைப் பார்க்கும்போது, குடும்பத்தில் ஒருவரை, சகோதரரை பார்க்கும் எண்ணம் உருவாகிறது. நான் முதலில் ரஜினிகாந்தை பார்த்தபோது தோன்றியதுதான், விஜய்யைப் பார்க்கும்போது தோன்றியது எனத் தெரிவித்துள்ளார்.