கழிவறையை பயன்படுத்த தெரியாமல் சிக்கிக்கொண்ட பெண்: ரயிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (10:52 IST)
சென்னை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயிலில் இருந்த கழிவறையை பயன்படுத்த தெரியாமல் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் முன்பெல்லாம்  இந்தியன் டாய்லெட் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்பொழுது நாடும் நாகரிகமும் முன்னேற, தற்பொழுது இந்தியன் டாய்லெட்டை விட்டுவிட்டு பல இடங்களில் வெஸ்ர்டன் கழிவறையே பயன்பாட்டில் இருக்கிறது. சிலருக்கு இந்த வெஸ்டன் டாய்லெட்டை பயன்படுத்த தெரிகிறது பலருக்கு இதுபற்றி தெரிவதில்லை. அப்படி வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்த தெரியாமல் பெண் ஒருவர் பட்ட அவஸ்தை சம்பவம் தான் இது.
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அந்த ரயிலில் பாரதம்மா என்ற பெண் பயணம் செய்ய ஏறினார். ஏறியதும் அவர் கழிவறைக்கு சென்றார். அங்கிருந்த வெஸ்ர்டன் டாய்லெட்டை பயன்படுத்த தெரியாத பாரதம்மா, தெரியாமல் அங்கிருந்த இரும்பு தகடுக்குள் காலை விட்டுவிட்டார். பின்னர் அவரால் காலை வெளியே எடுக்க முடியவில்லை. 
 
இதனால் பயந்துபோன அவர் கூச்சலிட்டார். அந்நேரம் ரயிலும் புறப்பட தயாரக இருந்தது. இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ஊழியகள் வந்து பாரதம்மாளின் காலை டாலெட்டுக்குள் இருந்து வெளியே எடுத்தனர். இந்த களேபரத்தால் ரயில் சற்று நேரம் தாமதமாக சென்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்