படங்களை OTT-யில் திரையிடும் போது வரும் வருமானத்தில் ஒரு பங்கு அளிக்க வேண்டும்.- தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்

செவ்வாய், 11 ஜூலை 2023 (15:04 IST)
சினிமா தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள்  மற்றும் அரசிடம் கோரிக்கைகள் விடுத்து, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு கொடுத்துள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:

*புதிய திரைப்படங்கள் வெளி வந்து 8 வாரம் கழித்து தான் OTTயில் திரையிட வேண்டும்.

*OTT-யில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும்.

*விளம்பர  போஸ்டர்ஸ்களுக்கு 1% (பப்ளிசிட்டி) நீக்க வேண்டும்.

*புதிய திரைப்படங்களுக்கு அதிபட்சமாக 60  சதவிகிதம் தான் பங்குத் தொகையாகக் வேண்டும்.

*திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை OTT-யில் திரையிடும் போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும்.

அரசிடம் கேட்டுள்ள கோரிக்கைகள்:

*திரையங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.

*திரையரங்குகள் வர்த்தக சம்மந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

*மின்சாரக் கட்டணங்கள், சொத்து வரி ஆகியவைகள் திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவண செய்ய வேண்டும்.

*ஏற்கனவே நாம் கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ  வழி செய்ய அரசை வேண்டுகிறோம்.’’ என்று தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி கோரி தமிழக அரசிடம் மனு அளித்திருந்தனர்.

அதில், தமிழ்நாட்டில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ.250 ஆகவும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 ஆகவும்,  Non- AC  திரையரங்குகளுக்கு ரூ.120 ஆகவும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்