கேரளா முழுவதும் திடீரென மூடப்பட்ட திரையரங்குகள்: என்ன காரணம்?

வியாழன், 8 ஜூன் 2023 (07:49 IST)
கேரளா முழுவதும் திடீரென திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னாள் வெளியான 2018 என்ற திரைப்படம் மிகப்பெரிய வசூலை அள்ளி கொடுத்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மே ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் திடீரென ஓடிடியில் வெளியாகி உள்ளது.
 
இன்னும் திரையரங்குகளில் நல்ல வசூலை செய்து கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியில் இந்த படத்தை வெளியிட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்டித்து கேரளாவில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை மூடி போராட்டத்தில் இறங்கி உள்ளனர். 
ஜூன் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு அனைத்து திரைப்பட காட்சிகளையும் ரத்து செய்து திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
 
மலையாளத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனை பெற்றுள்ள 2018 திரைப்படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிகப்பெரிய பிரச்சனை தற்போது ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்