ஊழல் குற்றச்சாட்டு! அதானி மீது இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை! அமெரிக்கா குற்றச்சாட்டு!’

Prasanth K

திங்கள், 13 அக்டோபர் 2025 (08:32 IST)

அதானி நிறுவனம் மீதான ஊழல் குற்றச்சாட்டில் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.

 

மத்திய அரசின் நிறுவனத்திடமிருந்து சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெற மாநில மின்வாரியங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க முதலீட்டார்களை தவறாக வழிநடத்தி 750 மில்லியன் டாலர் நிதி திரட்டியதாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் அதானி குழும தலைவர் கௌதம் அதானி, அவரது உறவினர்கள் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. அதான் க்ரீன் மற்றும் அஷ்யூர் பவர் நிறுவனங்கள் மீதான இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

இந்நிலையில் சமீபத்தில் அதானி நிறுவனம் குறித்து ஹிடென்பெர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என SEBI அறிவித்தது. அதை தொடர்ந்து அதானி நிறுவன பங்கு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 

இந்த நிலையில் நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் விளக்கம் அளித்த இந்த புகாரை விசாரித்து வரும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம், அதானி மீதான புகாரில் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்