சனிக்கிழமை இரவு, விடுதியில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தபோது, ஊழியர்கள் மதுபானத்தை பயன்படுத்தி, வாயில் ஊதி நெருப்பை வெளியிடும் 'ஃபயர் பிரீத்திங்' சாகசத்தில் ஈடுபட்டனர். எதிர்பாராதவிதமாக, நெருப்பு பின்னோக்கி வந்து சாகசத்தில் ஈடுபட்ட இருவரின் முகத்திலும் பற்றி கொண்டது. இதில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்த டேராடூன் காவல்துறை, விடுதி நிர்வாகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்தது. மேலும், "இதே போன்ற ஆபத்தான செயல்கள் மீண்டும் நடந்தால், விடுதியின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்" என்று கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.