மார்ச் 27ல் ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? மீண்டும் கிளம்பும் வதந்தி!

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (17:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்பதை அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபட அறிவித்தார்
 
இதனை அடுத்து ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் அவரது உடல்நிலையை கணக்கில் கொண்டு ரஜினியின் முடிவை ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் அரசியலுக்கு ரஜினி வரமாட்டார் என்பது 100% உறுதி செய்யப்பட்டுவிட்டது 
 
இந்த நிலையில் திடீரென ரஜினி மார்ச் 27ஆம் தேதி ரஜினி அரசியலுக்கு வரவிருப்பதாகவும் கட்சியைத் தொடங்கி தேர்தலில் நிற்க போவதாகவும் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்
 
ரஜினிக்கு மிகவும் நெருக்கமான சாமியார் ஒருவர் இதனை தெரிவித்ததாகவும் இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி வருகின்றனர். ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்ட பிறகும் இதுபோன்ற வதந்திகளை பரப்புவது எந்த விதத்தில் நியாயம் என ரஜினியின் உண்மையான ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்