கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே 1986 ஆம் ஆண்டு இதே பெயரில் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கமல் ஒரு போலிஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கமல் அரசியல் வாதியாக நடிப்பதாக சொல்லப்பட்டது. அதை உறுதி செய்வது போலவே டீசரில் கூட கரைவேட்டிகள் பலபேர் காணப்பட்டனர்.
இந்நிலையில் இப்போது கமல் இந்த படத்தை எப்படியும் தேர்தலுக்கு முன்னர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம். பிக்பாஸ் முடித்துவிட்டு மொத்தமாக இந்த படத்துக்கு 40 நாட்கள் தேதிகள் ஒதுக்க உள்ளாராம். மார்ச் மாத தொடக்கத்துக்குள் தனது காட்சிகளை முடித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல உள்ளாராம். மற்றக் காட்சிகளையும் பின் தயாரிப்புப் பணிகளையும் ஏப்ரல் மாதத்துக்குள் முடித்து ஏப்ரல் 14 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனராம்.