கார் ஓட்டி டீ மாஸ்டரை கொன்ற பிளஸ் 1 மாணவன் - நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (10:17 IST)
18 வயதுக்குட்பட்டோர் இருசக்கர வாகனம் ஓட்டுவதே சட்டப்படி குற்றம். அப்படி இருக்கும் வேளையில் பிளஸ்1 மாணவன் ஒருவன் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில்  டீ மாஸ்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரை சேர்ந்த தொழிலதிபரின், பிளஸ் 1 படிக்கும் மகன் தனது நண்பர்களோடு காரில் வெளியே சென்றுள்ளான். காரில் அசுர வேகத்தில் சென்ற அவன், எதிரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டீ மாஸ்டர் லட்சுமிபதி(55) என்பவர் மீது வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தினான்.
 
இந்த கோர விபத்தில் லட்சுமிபதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியது தொலிழதிபரின் மகன் என்பதால் வழக்கம்போல் போலீஸார் அவனை விடுவிக்காமல் அவனையும் அவனுக்கு பொறுப்பற்று வண்டியை கொடுத்த மாணவனின் பெற்றோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்