விபத்தில் சிக்கிய மோடியின் மனைவி - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

புதன், 7 பிப்ரவரி 2018 (12:59 IST)
பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் ஒரு சாலை விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற ஒருவர் மரணமடைந்தார்.

 
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, அவர் தனது குடும்பத்துடன் குஜராத் மாநிலத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். 
 
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-சித்தோர் நெடுஞ்சாலையில் வந்த போது அவர்களின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் யசோதாவுடன் வந்த ஒருவர் மரணமடைந்தார். மேலும், யசோதாபெண் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சித்தோர்கார் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஆனால், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்