18 பேரிடம் பலகோடி பணம் மோசடி செய்த நபர் ..

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (20:03 IST)
கரூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்த பணத்தில் சொகுசு வீடு கட்டியும் சொகுசு கார்கள் உலாவந்த வணிகவரித்துறை ஓட்டுநர் கைது.
கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் டிவன் காந்த் வயது :39 இவர் கரூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
 
கரூர் தாந்தோன்றிமலை உட்பட்ட சுந்தரவடிவேலு அவரது மனைவிக்கு வேலை வாங்கி தருவதாக 5 லட்சம் ரூபாயும் வெங்கமேடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக 5லட்ச ரூபாயும் பெற்றுக்கொண்ட மோசடியில் ஈடுபட்டார் என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணையில் கரூர் மாவட்டத்தில் 18-க்கும் மேற்பட்ட நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் பல லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளது தெரியவந்தது.
 
இந்த பணத்தின் தாந்தோணிமலை பகுதியில் புதிய சொகுசு வீடு கட்டி வருவதாகவும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கரூர் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
அவரிடமிருந்த 2 சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
18 பேரிடம் 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்