ஆடு என்று நினைத்து இளைஞரின் தலையை வெட்டிய நபர்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (18:59 IST)
ஆந்திர மாநிலத்தில்  ஆடு என்று நினைத்து ஒரு நபரில் தலையை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் காட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சித்தூர் என்ற மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற பகுதிக்கு அருகிலுள்ள வலசப்பள்ளி ஊர் எல்லையில் எல்லம்மா என்ற கோவில் உள்ளது. இங்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள், ஆடு, கோழி, ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.

பக்தர்கள்  தாங்கள் கொண்டு வந்த ஆடு கோழிகளை நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியதும் பலி கொடுத்தனர்,. அப்போது, ஒரு சுரேஷ் என்ற இளைஞர்  ஆடு ஒன்றைப் பிடித்தபடி நின்றிருந்தார்.

ஆடுகளைப் பலியிடும்  நபரோ அதிக போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது, இதில், ஆடு என்று    நினைத்து இளைஞர் சுரேஷின் தலையை வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதில், சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்