வங்க கடலில் உருவாகும் புதிய புயல்! ‘மிதிலி’ என பெயர் வைக்க முடிவு!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (11:10 IST)
வங்க கடலில் உருவாகி வலுவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானால் என்ன பெயர் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி இது புயலாக உருவானால் மாலத்தீவுகள் பரிந்துரைத்த “மிதிலி” என்ற பெயர் புயலுக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மோக்கா, ஹாமூன் புயல்கள் உருவான நிலையில் இந்த ஆண்டில் உருவாக உள்ள மூன்றாவது புயல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்