சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 அதிகரித்து, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த வாரம், தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படியாக குறைந்து வந்தது. வியாழன் அன்று ரூ. 320-ம், வெள்ளிக்கிழமை ரூ. 160-ம் குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், வாரத்தின் இறுதி நாளான இன்று, விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,120 அதிகரித்து, ரூ. 74,320-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 140 உயர்ந்து, ரூ. 9,290-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ஒரு கிராம் ரூ.123 என்றும் ஒரு கிலோ ரூ.1,23,000 என்றே விற்பனையாகி வருகிறது.