என் மகளை கொன்றவனுக்கு தூக்கு தண்டனை வேண்டும் : சிறுமியின் தாயார்

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (12:10 IST)
சேலத்திலுள்ள தாளவாய்பட்டியில் சிறுமி ராஜலட்சுமி தினேஷ்குமாரால் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என சிறுமியின் தாயார் சின்னப்பொண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் அருகே உள்ள தாளவாய்பட்டி கிராமத்தில் சாமிவேல் - சின்னப்பொண்ணு தம்பதியினர்  வசித்து வந்தனர். இவர்களுக்கு  ராஜலட்சுமி என்ற பெண் இருந்தார். அவர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
 
இந்நிலையில் தண்ணீர் பிடிப்பதற்காக பக்கத்து வீட்டில் வசித்து வந்த தினேஸ்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
 
அப்போது ராஜலட்சுமி வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இதை செய்த தினேஷ்குமார் பற்றி அவர் தன் தாயிடம் கூறியுள்ளார். இதனை தெரிந்து  கொண்ட தினேஷ்குமார் கடந்த மாதம் 22ஆம்தேதியன்று வெறித்தனமாக இவர்கள் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை அவரது தயார் முன்பே தலையை துண்டித்து கொலை செய்தார்.
 
பின்பு போலீஸார் தினேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இவ்விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது.
 
தமிழக முதலமைச்சரின் மாவட்டத்திலேயே இந்த குற்றச்சம்பவங்கள் நடந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தரப்பில் யாரும் ஆறுதல் சொல்ல வரவில்லை என்பதுதான் பெருத்தசோகம்.
 
 இந்நிலையில் சிறுமியின் தாயார் கூறியதாவது:
 
’என் மகளை கொலை செய்த தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். என மகளைப் போன்ற நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்