வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து: கேபி அன்பழகன் மனைவி, மருமகள், மீது வழக்கு!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (08:15 IST)
முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் அவரது மனைவி, மகன்கள், மருமகள் மீது ரூபாய் 1.32 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இன்று அதிகாலை முதல் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் கேபி அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன் மற்றும் சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்