சோதனை மேல் சோதனை.. சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி..! – வங்கி அதிரடி நடவடிக்கை!

புதன், 19 ஜனவரி 2022 (10:09 IST)
வங்கியில் கடன் நிலுவை காரணமாக சென்னையில் உள்ள ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடி சரவணா ஸ்டோர்ஸ். சென்னை தி நகரில் ரங்கநாதன் தெருவில் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் பேரில் இந்தியன் வங்கியில் ரூ.400 கோடி கடன் பெற்று நிலுவைத்தொகை கட்டப்படாமல் இருந்துள்ளது.

இதுதொடர்பாக தற்போது நடவடிக்கை எடுத்துள்ள இந்தியன் வங்கி அதிகாரிகள் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதனுடன் இணைந்த நகைக்கடையையும் ஜப்தி செய்துள்ளனர். சமீபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமானவரி சோதனை நடந்த நிலையில் தற்போது நடந்துள்ள ஜப்தி சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்