பஞ்சாப் முதல்வர் மருமகன் வீட்டில் ரெய்டு: கோடிக்கணக்கில் பணம், ஆவணங்கள் இருந்ததா?

புதன், 19 ஜனவரி 2022 (07:16 IST)
பஞ்சாப் முதல்வர் மருமகன் வீட்டில் ரெய்டு: கோடிக்கணக்கில் பணம், ஆவணங்கள் இருந்ததா?
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திடீரென அம்மாநில முதல்வரின் மருமகன் வீட்டில் சோதனை செய்யப்பட்டதாகவும் இந்த சோதனையில் கோடிக்கணக்கான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறையினர் மட்டும் அமலாக்க துறையினர் முக்கிய பிரபலங்களின் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று இரவு திடீரென பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னியின் மருமகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்
 
மேலும் அவருடைய நண்பர் வீட்டிலும் சோதனை நடந்ததாகவும் இதில் கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்