9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை.....

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (19:26 IST)
தமிழகத்தில்  சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே  சிறுமி ஜெயப்பிரியாவை மிகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சிறுமியைக் கொலை செய்த ராஜேஷ் என்பவனை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

இந்த ரணம் ஆறுவதற்குள்  தமிழகத்தில் மற்றோரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் சேகரசன்பேட்டை என்ற பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உடல் ஊருக்கு வெளியே உள்ள பகுதியில் எரிந்து நிலையில் சடலாக மீட்கப்பட்டுள்ளது.

மாணவி வீட்டின் அருகே குப்பை கொட்ட சென்றதாக தெரிகிர்றது. தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்  எரிசம்பவ இடத்தில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்