தமிழகத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான்: இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (11:02 IST)
தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளது என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவில் இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 450 ஐ தாண்டியுள்ளது.  இதனிடையே தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளது என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 
 
மேலும் ஒமிக்ரான் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சம் விளக்கம் அளித்தார். ஊரடங்கு தொடர்பாக வரும் 31 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளோம். ஆலோசனைக்கு பிறகு இரவு நேர ஊரடங்கு போடலாமா என்பது குறித்து முடிவு எடுப்போம் என பேட்டியளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்