பிடித்தே ஆகணும்... ராஜேந்திர பாலாஜியை தேட 6 தனிப்படைகள் அமைப்பு!!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (08:57 IST)
பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தேட மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு. 

 
அரசு வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன என்பதையும் தலைமறைவாக இருந்து இருக்கும் ராஜேந்திரபாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் மற்றும் ரமணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது மட்டுமின்றி ராஜேந்திர பாலாஜியின் கார் ஓட்டனர் ராஜ் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இதனைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இருக்கும் காவல் துறையினர் மேலும் 3 தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்தி ரபாலாஜியைத் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
 
ஏற்கனவே 3 தனிப்படைகள் தேடும் நிலையில் அதன் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்.பி. மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்