தமிழ்நாடு முழுவதும் 5ஜி சேவை எப்போது? ஜியோ அறிவிப்பு

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (07:58 IST)
தமிழ்நாடு முழுவதும் 5ஜி சேவை எப்போது என்பது குறித்து அறிவிப்பை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்தியாவின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி சேவை தொடங்கப்பட்டது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இந்த சேவை தற்போது வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது 
 
சென்னையை அடுத்து கோவை மதுரை திருச்சி சேலம் ஓசூர் வேலூர் ஆகிய 6 முக்கிய நகரங்களில் தற்போது ஜியோ நிறுவனம் தனது 5ஜி  சேவையை தொடங்கியுள்ளது நேற்று முதல் இந்த 5ஜி தொடங்கப்பட்டதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்