பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் முன்னே கல்லெறி தாக்குதல்: வந்தே பாரத் ரயிலின் பரிதாபம்

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (07:56 IST)
கடந்த சில நாட்களாக வந்தே பாரத் ரயில்கள் மீது மர்ம நபர்கள் கல்லெறிந்து வரும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட கொல்கத்தாவில் இயங்கிய வந்தே பாரத் ரயிலில் சில மர்ம நபர்கள் கல்லெறிந்தனர். 
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில் தொடங்க உள்ளது
 
பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த இந்த வந்த பாரத் ரயில் மீது நேற்று மர்ம நபர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. 
 
முறையாக வந்தே பாரத ரயில் தொடங்கும் முன்பே சோதனை ஓட்டத்தின் போது கல்லெறி தாக்குதல் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்