மருத்துவ மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்: மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (07:50 IST)
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்ற விதியை மீறிய மாணவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாக பணிபுரிய வேண்டும் என்பது விதி உள்ளது.
 
ஆனால் கடந்த 2020 மட்டும் 2021 ஆம் ஆண்டு படிப்பை முடித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தபோது ஒரு சிலர் அரசு மருத்துவமனைகளில் பணி புரிய விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது
 
எனவே அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லை என எழுதிக் கொடுத்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்