கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..! விமான நிலையத்தில் பரபரப்பு..!!

Senthil Velan
ஞாயிறு, 2 ஜூன் 2024 (12:43 IST)
சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
 
நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அப்போது அவரது உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர்.
 
இதில் கருணாஸ் கொண்டு வந்த கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், நடிகர் கருணாஸிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ: மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருப்பதாகவும், குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாகவும் விமான நிலைய அதிகாரியிடம் கருணாஸ் தெரிவித்தார். இருப்பினும் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்