ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்..முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தாரா எஸ்.ஆர்.சேகர்?

Mahendran

வியாழன், 23 மே 2024 (10:47 IST)
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கடந்த 21 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் எஸ்.ஆர்.சேகர் வீட்டிற்கு சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் எஸ்.ஆர்.சேகர் பல கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனையடுத்து மீண்டும் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக எஸ்.ஆர் சேகருக்கு மீண்டும்  சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே  ரூ.4 கோடி  சிக்கிய வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர் என்பதும், அவருடைய வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்கவும் சிபிசிஐடி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்