போதையில் தண்டவாளத்தில் மயங்கிய மாணவர்கள் – ரயில் மோதி நால்வர் பலி !

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (14:47 IST)
கோவை மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் போதையில் மயங்கிய நான்கு மாணவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கவுதம் ஆகிய இருவரும் அரியர்ஸ் தேர்வுகளை எழுதுவதற்காக கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிக்கு வந்துள்ளனர். தேர்வை முடித்த இவர்கள் அதே கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சேர்ந்த சித்திக் ராஜா, விஷ்வனேஷ்,ராஜசேகர் ஆகிய ஜூனியர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

பின்னர் டாஸ்மாக் கடைக்கு சென்று மேலும் மதுவை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு சென்று அருந்தியுள்ளனர். இதில் போதை தலைக்கேற 5 பேரும் தண்டவாளத்திலேயே மயக்கமாகி விழுந்துள்ளனர். அப்போது அந்த வழியே வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் அவர்கள் மேல் ஏறிச் சென்றதில் விக்னேஷ்வரை தவிர்த்து மற்ற நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விக்னேஷ்வர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  போலிஸார் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விக்னேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்