கச்சிகுடா ரயில் விபத்து பின்னணி என்ன? சிக்னலுக்கு முன் முந்திய லோகோ பைலட்
புதன், 13 நவம்பர் 2019 (13:35 IST)
ஹைதராபாத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்திற்கு சிக்னலுக்கு முன்பே புறநகர் ரயிலின் ஓட்டுநர் ரயிலை இயக்கியதுதான் காரணம் என கூறப்பட்டுள்ளது.
ஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் எம்.எம்.டி.எஸ். ரயில் ஒன்று, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கொங்கு எக்ஸ்பிரஸின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கிட்டதட்ட 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட தவறினால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக நேற்று கூறப்பட்டது. அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது.
இந்த விபத்துக்கு மனித தவறே காரணமாக இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆம், சிக்னல் அளிக்கப்படுவதற்கு முன்பே புறநகர் ரயிலின் ஓட்டுநர், ரயிலை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேபோல விபத்தின் போது எஞ்சின்களுக்கு அடியில் சிக்கி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புறநகர் ரயிலின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது.