சீனாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரொனா வைரஸ் தொற்று உலக நாடுகளுக்குப் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த கொரொனாவில் உருமாறிய பிஎஃப் 7 வைரஸ் தற்போது ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பரவி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு வரும் வெளி நாட்டுப் பயணிகளில் சிலரிடம் மட்டும் ரேண்டம் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு கொரொனா தொற்று இருப்பதாக தகவல் வெளியான நிலைய்ய்ல், இன்று வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.