கரூர் துயரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, அண்ணாமலை பெயரை சொல்லாமல் விமர்சித்தார்.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில், இதுகுறித்து மத்திய அரசின் எம்பிக்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு கரூர் வந்து விசாரித்து சென்றனர்.
அதுகுறித்து பேசிய செந்தில் பாலாஜி “மணிப்பூருக்கு செல்லாத, கும்பமேளாவுக்கு செல்லாத உண்மை கண்டறியும் குழு கரூருக்கு மட்டும் வந்திருப்பதன் காரணம் என்ன? பாதிக்கப்பட்ட அவர்களிடம் பேசும்போதும் அவர்கள் யார் மேல் குற்றம் என்று சொல்லும்போது கட்சி நிர்வாகத்தை ஒருவர் குற்றம் சொல்கிறார். உடனே அந்த மொழிப்பெயர்ப்பவர் அது மாவட்ட நிர்வாகம் என வேறொரு கருத்தை திணிக்க முயல்கிறார்” என குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று வந்த மத்திய உண்மை கண்டறியும் குழுவிற்கு மொழிபெயர்ப்பாளராக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைதான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவரின் பெயரை குறிப்பிடாமலே செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.
மேலும் கள்ளக்குறிச்சி சாராய மரணத்திற்கு ஏன் யாரும் செல்லவில்லை என்ற கேள்விக்கு, துணை முதல்வர் உதயநிதி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னதோடு, தேவையான உதவிகளையும் செய்து கொடுத்ததாக செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
Edit by Prasanth.K