மத்தியப் பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் மற்றும் இராஜஸ்தானின் சீக்கர் மாவட்டத்தில் மாநில இலவச மருத்துவத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகளும், ராஜஸ்தானில் ஒரு குழந்தையும் உயிரிழந்தது.
இதையடுத்து உடனடியாக தேசிய நோய் கட்டுப்பாடு மையத்திலிருந்து ஒரு மத்திய குழு சிந்த்வாராவுக்கு சென்று, தண்ணீர், பூச்சிகள் மற்றும் மருந்து மாதிரிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் இருமல் மருந்து தானா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.