நாளை 4 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K

புதன், 1 அக்டோபர் 2025 (14:48 IST)

வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் ஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மிதமனது முதல் கனமழை வரை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்