புனேவிற்கு சுற்றுலா சென்ற சென்னை மாணவர்கள் 3 பேர் பலி

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (08:20 IST)
புனேவுக்கு சுற்றுலா சென்ற சென்னை தண்டையார்பேட்டை பள்ளி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் நன்றாக படிக்கும் 20 மாணவர்களை தேர்ந்தெடுத்து, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று புனேவிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றது. சென்னையிலிருந்து கடந்த 23 ந் தேதி விமானம் மூலம் புறப்பட்ட மாணவர்கள் பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டனர்.
 
இந்நிலையில் புனேவில் உள்ள முல்ஷி அணைக்கு மாணவர்கள் நேற்று முன்தினம் சென்றனர். அங்குள்ள ஏரியில் மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டேனிஷ் ராஜா (13), சரவணக்குமார் (13), சந்தோஷ் (13) ஆகிய 3 மாணவர்களும் நீரில் மூழ்கினர். 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சந்தோஷ் என்ற மாணவனின் உடலை மீட்டனர். காணாமல் போன டேனிஷ் ராஜா, சரவண குமார் ஆகியோரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், விமானம் மூலம் புனேவிற்கு சென்றுள்ளனர். சுற்றுலா சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்