அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்: கசிந்த தகவல்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (19:51 IST)
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜகவுக்கு மொத்தம் 25 தொகுதிகளில் தர இருப்பதாகவும் அந்த தொகுதிகளும் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ள தொகுதிகள் கிட்டத்தட்ட அனைத்துமே திமுகவின் கோட்டைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் தொகுதிகள் என்பது ஆச்சரியமான தகவலாகும் 
 
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கிடைக்கும் உத்தேச தொகுதிகள் பின்வருமாறு: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, திருவண்ணாமலை, திருவையாறு, திருவாரூர், ராஜபாளையம், திருநெல்வேலி, திருச்செந்தூர், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பழனி, ராசிபுரம் (தனி), ஒட்டன்சத்திரம், வேப்பனஹள்ளி, தளி, கோவை வடக்கு, சிங்காநல்லூர், உதகமண்டலம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான தொகுதிகள் திமுகவின் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது,.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்