தமிழக அரசு ஊழியர்கள் புத்தகம் எழுதி வெளியிட ஏற்கனவே பல நிபந்தனைகள் உள்ள நிலையில் அதில் தற்போது தமிழக அரசு சில மாற்றங்களை செய்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிடுவது தொடர்பாக 1973ல் விதிமுறைகள் அமைக்கப்பட்டன. அதன்படி அரசு ஊழியர்கள் இலக்கியம், சிறுகதை, கவிதை உள்ளிட்ட புத்தகங்களை எழுதும் முன்பு நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் மற்றும் பதிப்பகத்தாரிடம் இருந்து பெரும் ஊதியம் குறித்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விதிமுறையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அரசு ஊழியர்கள் அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இதர இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதுவதற்கு முன் கூட்டியே அனுமதி பெறத் தேவையிலை. ஆனால் சம்பந்தப்பட்ட்ட அதிகாரிக்கு முறைப்படி தகவல் மட்டும் தெரிவிக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் எழுதும் புத்தகத்தில் மாநிலத்திற்கு எதிரான எந்த விதமான தாக்குதலோ, விமர்சனமோ இல்லை என்றும், மாநில சட்ட ஒழுங்கை பாதிக்கும் உள்ளடக்கம் இல்லை என்று உறுதிப்படுத்தும் கடிதத்தை சமர்பிக்க வேண்டும். பதிப்பகத்தாரிடம் ராயல்டி பெறுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். அலுவல் நேரத்தில், பதவி செல்வாக்கைக் கொண்டு புத்தக விற்பனையை அதிகரிக்க முயலக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K