தன்னிடம் மனு கொடுத்தால் 100 நாட்களில் அந்த குறையை தீர்ப்பேன் என்று தேர்தல் பிரச்சார மேடைகளில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறிவரும் நிலையில் கச்சத்தீவை மீட்டு தருமாறு மனு கொடுத்தால் 100 நாட்களில் அவரால் மீட்க முடியுமா என அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மக்களின் குறையை தீர்க்க ஸ்டாலின் 100 நாட்கள் கேட்கிறார். ஆனால் அதிமுக ஆட்சியில் ஒரே நாளில் மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. கட்சத்தீவை மீட்டு தரவேண்டும் என ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் 100 நாட்களில் மீட்டு தர முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்