வெற்றியா? சிறையா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்: அமமுக துணை பொதுச்செயலாளர்

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (07:00 IST)
அதிமுகவினருக்கு வரும் தேர்தலில் வெற்றி தேவையா? அல்லது சிறைச்சாலை தேவையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என அமமுக பொதுச்செயலாளர் செந்தமிழன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சசிகலாவின் விடுதலைக்குப் பின்னர் அமமுகவும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது ஓய்வில் இருக்கும் சசிகலா மிக விரைவில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக மற்றும் அமமுக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டுமென பாஜக பிரமுகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுகவினர் சசிகலா தலைமையை ஏற்று தேர்தலை சந்தித்தால் ஒரு சில இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் அனைவரும் ஜெயிலுக்கு செல்ல நேரிடும் என கூறியுள்ளார். செந்தமிழனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்